UA-201587855-1 Tamil369news தனக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி எதிர்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தனக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி எதிர்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தனக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை நடிகர் விஜய்சேதுபதி கீழமை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த துணை நடிகருமான மகாகாந்தியும் கடந்த 2021 நவ.2 அன்று பெங்க ளூரு நீதிமன்றத்தில் பரஸ்பரம் மோதிக் கொண்டனர். இந்த விவகாரத்தில் தன்னை தாக்கிவிட்டு அவதூறாக பேசிய தாக கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்திமனுதாக்கல் செய்திருந்தார்.

அந்தமனுவை விசாரித்த சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர்நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய்சேதுபதி ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் பிறப்பித்தது. அதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு தடைகோரியும், இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரியும் விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விஜய் சேதுபதிக்கு எதிரான இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென கடந்த ஜூலை 29-ல்உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை