UA-201587855-1 Tamil369news ரூட் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்காக விளையாடும் தனது கனவுக்கு ஒளியூட்டிய நெட் பவுலர்

ரூட் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்காக விளையாடும் தனது கனவுக்கு ஒளியூட்டிய நெட் பவுலர்

ஹைதராபாத்: இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வலைபயிற்சி மேற்கொண்ட இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விக்கெட்டை யாஷ்வீர் எனும் நெட் பவுலர் கைப்பற்றி உள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 100+ டெஸ்ட் போட்டிகள், 11416 ரன்கள் மற்றும் 30 சதங்களை பதிவு செய்த பேட்ஸ்மேனான ரூட் விக்கெட்டை தான் யாஷ்வீர் வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் நெட் பவுலராக விளையாடி வரும் 17 வயது வீரர் தான் யாஷ்வீர். இடது கை ஸ்பின்னர். செவ்வாய்க்கிழமை அன்று ரூட்டுக்கு சுமார் 10 ஓவர்கள் வீசி உள்ளார். இது தனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என அவர் சொல்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை