UA-201587855-1 Tamil369news கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி - தமிழகத்தின் தங்க வேட்டை தொடர்கிறது

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி - தமிழகத்தின் தங்க வேட்டை தொடர்கிறது

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்றும் தமிழக வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றனர்.

மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற டிராக் சைக்கிள் பந்தயத்தில் மகளிருக்கான 2 கிலோ மீட்டர் பிரிவில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.பி.தன்யதா தங்கப் பதக்கம் வென்றார். அவர், பந்தய தூரத்தை 2:52.333 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். மகாராஷ்டிராவின் ஷியா லால்வானி (2:54.530) வெள்ளிப் பதக்கமும், ராஜஸ்தானின் கார்கி பிஷ்னோய் (2:56.396) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை