UA-201587855-1 Tamil369news ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி தகுதி சுற்று | இந்தியா - அமெரிக்கா இன்று மோதல்

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி தகுதி சுற்று | இந்தியா - அமெரிக்கா இன்று மோதல்

ராஞ்சி: ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று வரும் ஜனவரி 13 முதல் 19-ம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூஸிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக் குடியரசு ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று (13-ம் தேதி) அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 14-ம் தேதி நியூஸிலாந்துடனும், 16-ம் தேதி இத்தாலியுடனும் இந்திய அணி மோதுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை