விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
விசாப்பட்டினத்தில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களும் இங்கிலாந்து 253 ரன்களும் எடுத்தன. 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 255 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்