UA-201587855-1 Tamil369news ஐசிசி டெஸ்ட் தரவரிசை | 12-வது இடத்துக்கு ஜெய்ஸ்வால் முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை | 12-வது இடத்துக்கு ஜெய்ஸ்வால் முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை அடைந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 12-வது இடத்தை அடைந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஜெய்ஸ்வால் தரவரிசையில் 69-வது இடத்தில் இருந்தார். இந்த தொடரில் 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதங்கள் விளாசியதன் மூலம் தரவரிசையில் படுவேகமாக முன்னேற்றம் கண்டு 15-வது இடத்தை எட்டிப்பிடித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை