UA-201587855-1 Tamil369news ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதல்

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம்தேதி தொடங்கும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் பொதுத்தேர்தல்தான். வரும் ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டங்களில் தான் ஐபிஎல் டி 20 தொடரின் போட்டிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் அட்டவணை அறிவிப்பதில் தாமதம் நிலவுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை