UA-201587855-1 Tamil369news சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் பிப்.4-ம் தேதி தொடக்கம்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் பிப்.4-ம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வரும் 4-ம் தேதிமுதல் 11-ம் தேதி வரை சென்னைநுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏடிபி சேலஞ்சர் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவது இது 6-வது முறையாகும்.

இந்த தொடரில் 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். 117- வது இடத்தில் உள்ள இத்தாலி வீரர் லுகா நார்டி, 137-ம் நிலை வீரரான இந்தியாவின் சுமித் நாகல், 165-வது இடத்தில் உள்ள செக்குடியரசின் ஸ்வர்சினா டாலிபோர், 168-வது இடத்தில் உள்ள உக்ரைனின் விட்டலி சச்கோவ், 196-ம் நிலை வீரரான இத்தாலியின் ஸ்டெபானோ டிரவக்லியா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை