UA-201587855-1 Tamil369news SL vs AFG முதல் ODI | அபார கூட்டணி அமைத்த அஸ்மத்துல்லா - நபி: போராடி தோற்ற ஆப்கானிஸ்தான்

SL vs AFG முதல் ODI | அபார கூட்டணி அமைத்த அஸ்மத்துல்லா - நபி: போராடி தோற்ற ஆப்கானிஸ்தான்

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இமாலய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி, வெற்றிக்காக கடுமையாக போராடி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் 6-வது விக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் மற்றும் முகமது நபி இணைந்து அபாரக் கூட்டணி அமைத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா, 139 பந்துகளில் 210 ரன்கள் எடுத்தார். ஃபெர்ணான்டோ 88 ரன்கள் எடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை