UA-201587855-1 Tamil369news சேப்பாக்கத்தில் மே 26-ல் ஐபிஎல் இறுதிப் போட்டி

சேப்பாக்கத்தில் மே 26-ல் ஐபிஎல் இறுதிப் போட்டி

சென்னை: ஐபிஎல் 17-வது சீசன் போட்டிகள் கடந்த 22-ம் தேதி தொடங்கின. பொதுத்தேர்தல் காரணமாக இந்த தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை மட்டும் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இதில் 21 ஆட்டங்கள் மட்டும் இடம் பெற்றிருந்தன. இந்த ஆட்டங்கள் வரும் ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவடைகின்றன.

இந்நிலையில் எஞ்சிய ஆட்டங்களுக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் நேற்று வெளியிட்டது. இதன்படி மே24-ம் தேதி 2-வது தகுதி சுற்று ஆட்டமும், 26-ம் தேதி இறுதிப் போட்டியும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை