சில்ஹெட்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 328 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி.
வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 511 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணியானது 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 13 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 49.2 ஓவர்களில் 182ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்