UA-201587855-1 Tamil369news இந்தியன் வெல்ஸ் மார்ஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் | ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இந்தியன் வெல்ஸ் மார்ஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் | ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் மார்ஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 123-ம் நிலை இத்தாலியின் லூகா நார்டியுடன் மோதினார்.

இதில் லூகா நார்டி 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்தார். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு தரவரிசையில் 100 இடங்களுக்குள் மேல் உள்ள வீரர் ஒருவர் மாஸ்டர்ஸ் அளவிலான டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரை தோற்கடிப்பது இதுவே முதன்முறையாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை