UA-201587855-1 Tamil369news ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: முதல் வெற்றியை பெறுமா டெல்லி?

ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: முதல் வெற்றியை பெறுமா டெல்லி?

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 453 நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் களத்துக்கு திரும்பியிருந்த ரிஷப்பந்த் 13 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். எனினும் இன்றைய ஆட்டத்தில் அவரிடம் இருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை