UA-201587855-1 Tamil369news டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்: நியூஸி. அணியில் டேவன் கான்வே

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்: நியூஸி. அணியில் டேவன் கான்வே

ஆக்லாந்து: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டேவன் கான்வே அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் ரச்சின் ரவீந்திரா, மேட் ஹென்றிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1-ம்தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை