UA-201587855-1 Tamil369news லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு: ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவிப்பு

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு: ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவிப்பு

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

42 வயதான ஆண்டர்சன் 2003-ம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஆண்டர்சன் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ள முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை ஆண்டர்சன் வசமே உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 194 ஆட்டங்களில் விளையாடி 269 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதே வேளையில் சர்வதேச டி 20-ல் 19 ஆட்டங்களில் பங்கேற்று 18 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை