அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படம், 'புஷ்பா 2'. சுகுமார் இயக்கும் இந்தப் படம் ஆக.15-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியவில்லை என்பதால் அந்த தேதியில் வெளியாகாது என்கிறார்கள்.
இதுகுறித்து சினிமா விநியோகஸ்தர்கள் தரப்பில் பேசிக்கொண்டாலும் தயாரிப்புத் தரப்பில் அறிவிக்கவில்லை. இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவான 5 படங்கள் அந்த தேதியில் களமிறங்க ஆயத்தமாகி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்