ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ வரும் டிசம்பர் 6 அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், வரும் ஆக.15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்