UA-201587855-1 Tamil369news வைரல் வீடியோ எதிரொலி: மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த நாகர்ஜுனா!

வைரல் வீடியோ எதிரொலி: மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த நாகர்ஜுனா!

மும்பை: சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் நடிகர் நாகர்ஜுனாவுடன் செல்பி எடுக்க வந்த மாற்றுத்திறனாளி ரசிகரை பாதுகாவலர்கள் தள்ளிவிட்ட விவகாரம் கடும் விமர்சனங்களை கிளப்பிய நிலையில் தற்போது அந்த ரசிகரை நாகர்ஜுனா நேரில் சந்தித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவில், நாகர்ஜுனாவிடம் மன்னிப்புக் கேட்ட ரசிகரிடம், ‘மன்னிப்பு கேட்கவேண்டாம். இது உங்களுடைய தவறு இல்லை” என்று தெரிவித்துவிட்டு அந்த ரசிகரை கட்டியணைத்து வாழ்த்திவிட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை