UA-201587855-1 Tamil369news நார்வே செஸ்: கார்ல்சனிடம் வீழ்ந்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ்: கார்ல்சனிடம் வீழ்ந்தார் பிரக்ஞானந்தா

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டாரான ஆர்.பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இந்த ஆட்டம் 75-வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது. இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க ஆர்மகேடான் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

இன்னும் 2 சுற்றுகளே மீதம் உள்ள நிலையில் மேக்னஸ் கார்சல்சன் 14.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 13.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். பிரான்ஸின் ஃபிரோஸ்ஜா அலிரேசா 11 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், அமெரிக்காவின் பேபியானோ கருனா 9 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென் 4.5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை