UA-201587855-1 Tamil369news இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 121 ரன்னுக்கு சுருண்டது மே.இ.தீவுகள் அணி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 121 ரன்னுக்கு சுருண்டது மே.இ.தீவுகள் அணி

லார்ட்ஸ்: இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக மைக்கேல் லூயிஸ் 27, கவேம் ஹாட்ஜ் 24,அலிக் அத்தானஸ் 23, அல்சாரிஜோசப் 17 ரன்கள் சேர்த்தனர்.கேப்டன் பிராத்வெயிட் 6, கிர்க் மெக்கென்சி 1, ஜேசன் ஹோல்டர் 0, ஜோஷ்வா டி சில்வா 0, ஜெய்டன் சீயல்ஸ் 2 ரன்களில் நடையை கட்டினர். குடகேஷ் மோதி 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை