சென்னை: பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் (80). மலையாள பாடகரான இவர், தமிழில் இளையராஜா இசையில் பாடத் தொடங்கிய பின் அதிகம் பிரபலமானார். அவர் பாடிய,‘வசந்தகால நதிகளிலே’, ‘ராசாத்தி உன்னைகாணாத நெஞ்சு’, ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’, ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, ‘கொடியிலே மல்லிகை பூ’ உட்பட பல பாடல்கள் சூப்பர் ஹிட் வரிசையில் இருக்கின்றன.
இந்நிலையில் அவர் உடல்நிலை குறித்துசமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.இதுகுறித்து அவர் குடும்பத்தினர் அளித்துள்ள விளக்கத்தில், “இரண்டு மாதத்துக்குமுன் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது எடுத்த அவரது புகைப்படத்தை வெளியிட்டு வதந்தி பரப்புகின்றனர். வயது முதிர்வு தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும் அவர் நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்