சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. பூபதி வைஷ்ண குமார் 63, சோனு யாதவ் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த டிஎன்சிஏ லெவன் அணி 117.3 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பூபதி வைஷ்ண குமார் 82, சோனுயாதவ் 39, அஜித் ராம் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் ஹிமான்ஷு சிங் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்