UA-201587855-1 Tamil369news தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: இறுதிக்கட்ட தொடர் இன்று தொடக்கம்

தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: இறுதிக்கட்ட தொடர் இன்று தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் ‘பள்ளிகள் ஹாக்கிலீக்’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டங்களை உள்ளடக்கிய இந்த தொடரின் முதல் கட்டத்தில் 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் இருந்து 38 அணிகள் தேர்வு செய்யப்பட்டு 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த தொடரில் இருந்து வெற்றி பெற்ற அணி மற்றும் 6 மண்டல அணிகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட அணி என மொத்தம் 12 அணிகளை உருவாக்கி 3-வது கட்டமான மாநில அளவிலான போட்டி நடத்தப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை