UA-201587855-1 Tamil369news அமெரிக்க பல்கலை.யில் பயில்வதற்காக டேபிள் டென்னிஸ் விளையாட்டை துறந்தார் இந்தியாவின் அர்ச்சனா காமத்

அமெரிக்க பல்கலை.யில் பயில்வதற்காக டேபிள் டென்னிஸ் விளையாட்டை துறந்தார் இந்தியாவின் அர்ச்சனா காமத்

சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணியில் அர்ச்சனா காமத் இடம் பெற்றிருந்தார். அவரை உள்ளடக்கிய இந்திய அணி முதன்முறையாக கால் இறுதி சுற்றில் கால்பதித்து சாதனை படைத்திருந்தது. எனினும் அந்தசுற்றில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. கால் இறுதி சுற்றில் மற்ற இந்திய வீராங்கனைகள் தோல்வியை சந்தித்த போதிலும் தனது ஆட்டத்தில் அர்ச்சனா காமத் வெற்றியை வசப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் 24 வயதான அவர், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் அவர், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Public Policy என்ற முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாமல் திரும்பிய அர்ச்சனா காமத், படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை