UA-201587855-1 Tamil369news சவுத் சகீல் 141, ரிஸ்வான் 171* ரன் விளாசல்: பாகிஸ்தான் 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது

சவுத் சகீல் 141, ரிஸ்வான் 171* ரன் விளாசல்: பாகிஸ்தான் 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது

ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சவுத் சகீல் 141 ரன்களும், முகமதுரிஸ்வான் 171 ரன்களும் விளாசினர்.

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 158ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அஸம் 0 ரன்களில் நடையை கட்டினர். சவுத் சகீல் 57, முகமது ரிஸ்வான் 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வதுநாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை