சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ரயில்வேஸ் - டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணிகள் மோதின. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 459 ரன்களும், ரயில்வேஸ் 355 ரன்களும் எடுத்தன. 104 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 53 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 82, ரித்திக் ஈஸ்வரன்53 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 332 ரன்கள் இலக்குடன் ரயில்வேஸ் அணி பேட்டிங் செய்தது. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 73 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட நாயகனாக டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன் அணியின் முகமது அலிதேர்வானார். அவர், முதல் இன்னிங்ஸில் 182 ரன்கள் விளாசியிருந்ததார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்