சென்னை: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் பென்றார். பாராலிம்பிக்ஸில் அவர் வென்ற 3-வது பதக்கமாக இது அமைந்தது. 2016-ம்ஆண்டு பாராலிம்பிக்ஸில் தங்கப்பதக்கமும், 2021-ம் ஆண்டு பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் மாரியப்பன் வென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்