UA-201587855-1 Tamil369news ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: ஜாஸ் பட்லர் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: ஜாஸ் பட்லர் விலகல்

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர், காயம் காரணமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இங்கிலாந்து அணி கேப்டனாக விக்கெட் கீப்பரும், அதிரடி வீரருமான பிலிப் சால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை