UA-201587855-1 Tamil369news முகமது அமான் சதம் விளாசல்: 211 ரன் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது யு-19 இந்திய அணி

முகமது அமான் சதம் விளாசல்: 211 ரன் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது யு-19 இந்திய அணி

ஷார்ஜா: யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை 211 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த யு-19 இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. கேப்டன் முகமது அமான் 118 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரரான ஆயுஷ் மகத்ரே 29 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், கே.பி.கார்த்திக்கேயா 49 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை