UA-201587855-1 Tamil369news சதுரங்கத்தில் புதிய சகாப்தம்: உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சதுரங்கத்தில் புதிய சகாப்தம்: உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சிங்கப்பூர்/ சென்னை: சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் நிறைவு விழா​வில், உலக சாம்​பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு தங்கப் பதக்​கம், டிராபி​யுடன் ரூ.11 கோடி பரிசுத் தொகை​யும் வழங்​கப்​பட்​டது. அவரை ஊக்கப்​படுத்​தும் வகையில் தமிழக அரசு சார்​பில் ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்​கப்​படும் என்று முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார்.

சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சீனா​வின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்​பியன் பட்டம் வென்​றுள்​ளார் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்​டரான 18 வயது குகேஷ். இதன்​மூலம் இளம் வயதில் உலக சாம்​பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை​யும் படைத்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை