‘பிழை’, ‘தூவல்’ படங்களை இயக்கிய ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ள படம், ‘எக்ஸ்ட்ரீம்’. இதில் ரச்சிதா மஹாலட்சுமி, அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், ராஜ்குமார், சிவம் உட்பட பலர் நடித்துள்ளனர். சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் தயாரித்துள்ளனர்.
படம் பற்றி ராஜவேல் கிருஷ்ணா கூறும்போது, “எக்ஸ்ட்ரீம் என்றால் தீவிரம், அளவுக்கு அதிகம் என்று சொல்லுவோம். எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. அதை மீறும்போது நடக்கும் விளைவுதான் இந்தப் படத்தின் கதை. பெண்களுக்கான படம் இது. நான் இயக்கிய ‘தூவல்’ படம், பல்வேறு பட விழாக்களில் 40 விருதுகளைப் பெற்றது. இங்கு மக்கள் ஆதரவு இருந்தும், திரையரங்குகள் தராதது மிகுந்த வருத்தமளித்தது. இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். வரும் 20ம் தேதி எக்ஸ்ட்ரீம் வெளியாகிறது” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்