UA-201587855-1 Tamil369news 'ஆர ய ஓக பப?' சலலபபட வணடய கத - லடசம ரமகரஷணன

'ஆர ய ஓக பப?' சலலபபட வணடய கத - லடசம ரமகரஷணன

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது இயக்கியுள்ள படத்துக்கு 'ஆர் யூ ஓகே பேபி?’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதில், சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். அபிராமி, மிஷ்கின், முருகா அசோக், பாவல் நவநீதன், ரோபோ ஷங்கர், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

படம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது "நான் நடத்திய டாக் ஷோவின் பார்வையாளர்களுக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், அவர்களுக்கு இந்தப் படத்தின் மூலம் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். இந்தப் படம் ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களைப் பற்றிய விவாதமாக இருக்கும். இது சொல்லப்பட வேண்டிய கதை. இந்தப் படத்துக்கு இளையராஜா நிகழ்த்திய மேஜிக்கை நேரில் உணர்ந்தேன். ஒரு பாடல்தான். அதை அவரே எழுதியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை