UA-201587855-1 Tamil369news இநதய கடபபநத சஙக தலவரனர ஆதவ அரஜன

இநதய கடபபநத சஙக தலவரனர ஆதவ அரஜன

சென்னை: இந்திய கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக தமிழக கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 39 வாக்குகளில் ஆதவ் அர்ஜுனா 38 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முன்னாள் வீரரும், மத்திய பிரதேச கூடைப்பந்து சங்கத்தின் தலைவருமான குல்விந்தர் சிங், பொதுச் செயலாளராக தேர்வானார். துணைத் தலைவர்களாக அஜய், டொனால்ட் ஸ்டீவன் வஹ்லாங், லால்ரினாவ்மா ஹ்னாம்டே, மனோகர குமார், நார்மன் ஐசக், ரலின் டி சோசா, சீமா சர்மா ஆகியோரும் பொருளாளராக டி.செங்கல்ராய நாயுடுவும் தேர்வு செய்யப்பட்டனர். துணை செயலாளராக சக்ரவர்த்தி, முனிஷ் சர்மா, பிரதீப் குமார், பிரகாஷ் சண்டூ, சூர்யா சிங் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை