UA-201587855-1 Tamil369news 69-வது தேசிய திரைப்பட விருதுகள் | சிறந்த தமிழ்ப் படமாக ‘கடைசி விவசாயி’ தேர்வு: சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்

69-வது தேசிய திரைப்பட விருதுகள் | சிறந்த தமிழ்ப் படமாக ‘கடைசி விவசாயி’ தேர்வு: சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன்

புதுடெல்லி: 2021-ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் கேட்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேசிய திரைப்பட விருதுக்கான ஆளுமைகளை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது.

தெலுங்கில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ் (பார்ட் 1)’ படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சிறந்த நடிகைக்கான தேசிய விருது ‘கங்குபாய் கதியாவாடி’ படத்தில் நடித்த ஆலியா பட் மற்றும் ‘மிமி’ படத்தில் நடித்த கிருத்தி சனோன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை