அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான், ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்தார். அப்போது அவர் கூறும்போது, “ ஜவான் ஒரு எமோஷனல் டிராமா. இந்த ஜானரில்தான் படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் சிறப்பானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்