UA-201587855-1 Tamil369news WI vs IND 4-வது டி20 | அசத்திய ஓப்பனிங் ஜோடி - மேற்கு இந்திய தீவுகளை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி

WI vs IND 4-வது டி20 | அசத்திய ஓப்பனிங் ஜோடி - மேற்கு இந்திய தீவுகளை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி

புளோரிடா: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 179 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக ஆடி 39 பந்தில் 61 ரன்களை குவித்தார். ஷாய் ஹோப் 45 ரன்கள் எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை