UA-201587855-1 Tamil369news தமிழ்நாடு வாலிபால் லீக்: சென்னை அணி சாம்பியன்

தமிழ்நாடு வாலிபால் லீக்: சென்னை அணி சாம்பியன்

சென்னை: தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில் முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டிகள் சென்னை மைலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ்-கடலூர் வித் அஸ் அணிகள் மோதின.

இதில் சென்னை ராக்ஸ்டார்ஸ் 21-17, 21-16, 21-19 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன்பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம்வென்ற அந்த அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடம் பிடித்த கடலூர் அணிக்கு ரூ.3 லட்சமும், 3-வது இடம் பெற்ற விருதுநகர் கிங் மேக்கர்ஸ் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை