UA-201587855-1 Tamil369news முதல் டி20-ல் மே.இ.தீவுகளை வென்றது ஆஸி.: டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசல்

முதல் டி20-ல் மே.இ.தீவுகளை வென்றது ஆஸி.: டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசல்

ஹோபர்ட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. தொடக்க வீரரான டேவிட் வார்னார் 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஹோபர்ட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு213 ரன்கள் குவித்தது. தனது 100-வது சர்வதேச டி 20 போட்டியில் களமிறங்கிய தொடக்க வீரரான டேவிட் வார்னர் 36 பந்துகளில், 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 70 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் இங்லிஷ் 25 பந்துகளில், 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் சேர்த்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை