UA-201587855-1 Tamil369news ‘உள்ளூர் கிரிக்கெட் விவகாரத்தில் பிசிசிஐ முடிவை வரவேற்கிறேன்’ - கபில் தேவ்

‘உள்ளூர் கிரிக்கெட் விவகாரத்தில் பிசிசிஐ முடிவை வரவேற்கிறேன்’ - கபில் தேவ்

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த முடிவை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

அண்மையில் வெளியான வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தத்தில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டனர். உள்ளூர் கிரிக்கெட்டில் தங்களது மாநில அணிக்காக அவர்கள் விளையாட மறுத்தது இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்த முடிவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆதரித்தும், விமர்சித்தும் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை