UA-201587855-1 Tamil369news “நான் துன்புறுத்தப்படவில்லை” - பாலாவின் ‘வணங்கான்’ சர்ச்சைக்கு நடிகை மமிதா விளக்கம்

“நான் துன்புறுத்தப்படவில்லை” - பாலாவின் ‘வணங்கான்’ சர்ச்சைக்கு நடிகை மமிதா விளக்கம்

சென்னை: ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பின்போது தன்னை இயக்குநர் பாலா அடித்ததால் அப்படத்திலிருந்து விலகியதாக நடிகை மமிதா பைஜு கூறியது சர்ச்சையான நிலையில், தற்போது அந்த விவகாரம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை மமிதா பைஜு, “வணங்கான் படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலா அடித்ததால் படத்திலிருந்து விலகினேன்” என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இயக்குநர் பாலா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை